Thursday, August 30, 2012

யாரிட்டையும் சொல்லிடாதேயுங்கோ......இது இரகசியம்


யாரிட்டையும் சொல்லிடாதேயுங்கோ......இது இரகசியம்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmDXh0S4PDJ6bM7YOcX4LgLvS1SyRVR6wNCSi9RAa5s4w0g7bxh0i326b8Ax82Wsh3t4jORLSrEW7CeWHR3ZZMa3m46v9Ba37UCqgptlUodcnTqQoFJAHUcF26iRT-XinneDvDOkZ-Vzxs/s200/World%25E2%2580%2599s+First+Digital+Camera+%25281975%2529.jpg
இன்றைய பதிவில் இணையத்தில் உலா வரும் போது என்னுடைய கண்களுக்கு புலப்பட்ட ஒரு சில புகைப்படங்களை  உங்களுடன் பகிர்ந்து கொள்ளாம் என ஆசை கொள்கிறேன்.
எல்லாம் ஒரு ப்ளாக்கர் (சமூக) சேவை நன் நோக்கத்தில் தான் பகிர்ந்து கொள்கிறேன். பொது அறிவு தொடர்பான விடயங்களை தான் மட்டும் தெரிந்து வைத்திருப்பது மகா தப்பு என்னு எங்க அப்பத்தா சொல்லியிருக்கிறாவு அதனால இத உங்களுடன் பகிர்ந்துக்கிறேன் நீங்களும் உங்க ஜென்ரல் நொலேஜ நல்லா வளர்த்துக்கோங்க.........

உலகத்தின் முதலாவது மோட்டார் சைக்கிள் (1885)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAU7afd-PEEO1AE81QaM0UQNRpJSiooJi7G61-qLV0mmwtP7gHiSgziPYZpNfMyiVlWGJojFBUcvOfL5sZIz_7lFMdzbtpfN_tnHKa9grZbQKHvjapM45-35LWU_ljAqov3YM4Ob6_aBih/s400/World's+First+Motorcycle+%281885%29+Daimler%27s+riding+car.jpg
டைம்ளர் ரைடிங் கார் என்று அழைக்கப் படும் இந்த வாகணத்தை ஜேர்மனி நாட்டவர்கள் தயாரித்தனர் இதுவே முதலாவது மோட்டார் சைக்கிளாகவும் பெற்றோல் பயன்படுத்தக் கூடிய முதலாவது வாகணமாகவும் காணப்பட்டது.

உலகத்தின் முதலாவது டிஜிடல் கமெரா (1975)


1975 டிசம்பர்களில் கொடக் (kodak) நிறுவனத்தின் தொழிநுட்பவியலாளர்களால் 0.01 மெகா பிக்ஸல் கொண்ட முதலாவது டிஜிடல் கெமரா அறிமுகப்படுத்தப் பட்டது.இதிலேயே வீடியோக்களையும் பதிவு செய்ய முடிந்தது மேலும் பிடிக்கப் பட்ட புகைப்படங்களை விரைவாக பிரிண்ட் செய்யக்கூடிய வசதியையும் இது கொண்டிருந்தமை அப்போதிருந்த தொழிநுட்பத்தின் அதீத வளர்ச்சியைக் காட்டுகிறது.

உலகத்தின் அதிக விலையுயர்ந்த சைக்கிள் 2008


$ 114 464 (டொலர்) பெறுமதி கொண்ட சைக்கிளினை ஸ்கெண்டினேவியன் டிசைன் நிறுவனம் 2008 களில் அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் விலையுயர்வுக்குக் காரணம் இதில் பயன்படுத்தப்ட்டுள்ள தட்டுக்கள் அணைத்தும் 24 கரட் தங்கமாகும். இந்த தயாரிப்புகளில் 5 மற்றுமே இதுவரை டுபாய்,ரஷ்யா,  இத்தாலி, அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உலகின் அதிக விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJnFniF6AUOzIoRYVHaEi6uIjLpga902XDro9cZF1tWK7yih-8xzuzyYbtMpYa1cbaYtDGAt1ZQPVOInHlsU4p3pXmQAnXMQhN63wwoK-5FGpRF0LpPLY3yGWvdCFgoeWkuZaf105GNDJu/s400/worldsamazinginformation.blogspot.com+Most+expensive+motorcycle+1.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzmdrU4PmKpu_UF61N5DX4uPRTzAWb-1RJ4QrwZ1H0ihPX6uvlFZcWF5YNg6uRZwl9-d3PvqTLDWKEtDcot06Qyxny2rGVSUZ_7uNOpItbYlO2IVok5oi5ekCkNFtJR_Z7qvtQvj6XE87S/s400/worldsamazinginformation.blogspot.com+Most+expensive+motorcycle+2.jpg


$ 275 000 (டொலர்) பெறுமதியான இம் மோட்டார் சைக்கிள் முற்று முழுவதுமாக டைட்டேனியத்தினால் செய்யப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment